Sunday, 19 April 2020

லைட்டுபூச்சி


சூரியனை எரிக்கும் விளக்குகள் தேடுகிறேன்
கடைகளில் அவற்றை தர மறுக்கின்றனர்
அப்படி ஒரு விளக்கில்லையென்று விரட்டுகின்றனர்
சிலர் அதை மறைத்து வைக்கின்றனர்
பாழடைந்த வீட்டில் முதியவர் ஒருவர் அது கிடைக்கும் என்றார்
ஏழு கடல் தாண்டி மலைகள் தாண்டி
மெலிந்து  குகை ஒன்றை அடைந்தேன்
கிடைத்தது கோடி கோடி விளக்குகள் 
அனைத்தும் அணைந்தவை
பின் இரவில் வீட்டின் மூலையில் நிற்கையில் வீடு பிரகாசித்தது
என் உடம்பிலிருந்து விளக்கொன்றை உருவியெடுத்தேன்
அது பிரகாசமாயில்லை 
ஆனால் எரிக்க போதுமானதாய்.

No comments:

Post a Comment