Sunday 16 February 2020

யா தேவி! : வாசிப்பனுபவம்

யா தேவி! : https://www.jeyamohan.in/129209#.XkkcUyhKhPY

உடல் நம்முடன் நாம் கருவில் உருவான தருணத்தில் இருந்தே இணைந்துள்ளது அதாவது நாம் நம்மை அறிவதற்கு முன்பே அவை நம்முடன் இருக்கின்றன. நம் ஆழ்மனம் நம் உடம்புடன் தொடர்புற்றே இயங்குகிறது.
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பது அதன் வெளிப்பாடே. அது சீண்டப்படும் போது ,  சீழ்பிடிக்கும் போது நம் மனம் அதனை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.

பெண்களின் உடல் தரிசிக்கப்படும் இடத்தில் இருந்து அது பறித்துச்செல்லப்படும் பொருளாக ஆன தருணமே அவர்கள் தங்கள் உடலை முழுதாய் உணர்ந்தனர். அதனை பாதுகக்க அதனை வளர்த்தெடுக்க அதனை காமத்தின் மொத்த பொருளாக ஆக்கிக்கொண்டனர். இதுவொரு பரிணாம வளர்ச்சியாகவே நடந்திருக்க வேண்டும்.

கசண்டாஸ்கியின் சோர்பா ஒர் இடத்தில் சொல்கிறான் "நான் செய்த குற்றங்களில் மன்னிக்கவே முடியாதது என் பாட்டியை நான் தண்டித்தது"  அவன் சிறுவயதில் அவள் ஆடியின் முன் தன் மெலிந்த வற்றிய கூந்தலை தொட்டு நீவி வாறும் பொழுது "உனக்கு எதற்கு இதெல்லாம் , நீ என்ன இளங்குமரியா" என்கிறான். அவள் அவனை துரத்தி நீங்காத சாமொன்றைவிட்டு  ஆடியைப்பார்த்தவாறே அழுகிறாள். "அந்த சாபம் என்னைவிட்டு எப்பொழுதும் நீங்காது , பெண்கள் பாபப்பட்டவர்கள்"  எங்கிறான். பின் புபுலீனாவை கட்டித்தழுவி அவளின் அழகை புகழ்கிறான்.

எல்லா ஆக்னெஸ் என்பது அவள் பெயர் அல்ல. அவளின் பல உடல்களின் ஓர் உடலின் பெயர். பல முலைகள் பல அல்குல்கள். அந்த உடல்களை ஆண்கள் புழுவென புணர்ந்துகொண்டேயிருக்கின்றனர். ஆம் ஆண்கள் அவளுக்கு  காமமெனும் புண்ணில் நெளியும் புழுவைபோன்றவர்கள். தன்னை தன் மெய்யான உடலை அப்பெண்ணை காமத்தோடு தழுவும் ஒரு ஆணை அவள் எதிர்நோக்கிக்காத்திருந்தாள் தென்குமரிக்கன்னியைபோல. ஆனால்  இன்றுவரை புழுக்கள் மொய்த்துக்கொண்டெயிருக்கின்றன. தன் சூம்பிய முலைகளை வரண்ட உதடுகளை , தொங்கிய கண்ணின் கீழ்சதைய விரும்பி புணரும் ஆணை அவள் எதிர்பார்த்திருந்தாள். தன் உடல் அவமதிக்கப்படுவதை தன் உடல் தவிர்க்கப்படுவதை தன் உடல் காமத்தை தூண்டாததை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. அதொரு பரிணாம இச்சை. அதுவே அவளிடமும் இருக்கின்றது.

அவன் அந்த பாடலை நினைத்ததாக சொன்னதும் அவளால் நிம்மதியாக தூங்க முடிந்தது. புணர்ச்சி முடிந்த தூக்கம். உண்மையில் அவன் அந்தபாடலை நினைத்தானா ? இல்லை அது மருத்துவனால் குடுக்க முடிந்த கடைசி சிகிழ்சையா ? இல்லை அவன் ஒரு பெண்ணாக உணர்ந்து அவளுக்கு அப்பொதைய தேவை அந்த பாடலே என்றுணர்ந்து சொன்னானா ?

காடு நாவலில் கிரிதரனின் அம்பிகா அக்கா கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அழுவதை கிரிதரன் பார்க்கிறான். அப்பொழுது ஒரு வேளை அந்த  பாடலை அவன் பாடியிருந்தால் , சோர்பா தன் பாட்டியிடம் அந்த பாடலைப்பாடியிருந்தால் அவர்களின் அழுகைகள் , கோபங்கள் அடங்கி நிம்மதியாக அன்றிறவு தூங்யிருக்கலாம் எல்லாவைப்போல.

No comments:

Post a Comment