Sunday, 12 April 2020

எங்கும் கிடப்பவை


தினமுன் என் நண்பன் கால்களுக்கு கீழே எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்
சில நேரம் விளைகளுக்குள்
சில நேரம் கடற்கரையில்
சில நேரம் கிணற்றின் அடியில்
சில நேரம் வீட்டின் பறனில்
சில நேரம் போலீஸ் ஸ்டேசனின் கழிவறை அருகில்
சில நேரம் பத்திரமான டிரங்குப்பெட்டிக்குள்
சில நேரம் தெருநாய்களுக்கருகில்
பின்பு கிடத்ததைவைத்து அழகாகதொரு பளிங்கு மாளிகை கட்டியுள்ளான்
முத்தாய்ப்பாக உச்சியில் இருந்தது அவன் அண்ணனின் மண்டையோடு

No comments:

Post a Comment