இறந்தவர்களின்
முகங்கள் மேகங்களில் அலைகின்றன
ஒன்றுவிடாமல்
சிரித்தும்
அழுதும் கர்ஜித்தும் தவித்தும் வெட்கியும்
ஒன்று
காட்டி இன்னொன்றாய் பின் மறைகின்றன
கைக்குள்
அகப்படும் பஞ்சுபோன்ற அவை
பூதாகாரமாய்
தலைமேல் நிற்கும் விண்வெளியாய் அவை
ஆனால்
அதிலும் விசித்திரம்
ஒருமுறை
கண்ட செத்தவரை மீண்டும் காணயியலாது
அவ்வளவுபேரையும்
கொண்டுள்ளது அல்லவா களங்கள்!
No comments:
Post a Comment