பொன்னிறம் எங்கும் பொன்னிறம் ஆம் நான் கண்டுகொண்டேன் என் வானில் அது ஜொலிக்கிறது. அதன் நடுவில் நூல் கட்டியது போல சுழல்கிறது. பொன் விண்மீன்கள் அதே போல சுழல்கின்றன. கைக்கு எட்டமுடியாத தூரத்தில் அவை சுழல்கின்றன. ஆனால் நான் அந்த பொன்னை உருக்கி வழிந்தோடவிடுகிறென். கைக்கு அகப்பட்டு மீண்டும் மீண்டும் அது நழுவி வலகி செல்கிறது. பொன் என்னை சூழ்ந்து கொண்டு உள்ளில் வெறுமையை நிரப்பியது. அடங்கா வெறுமையுடன் அதை ஊளையிடும் தனித்த ஓநாயென நான்.வெறுமை தனிமை முட்ட முட்ட குடித்தேன்.
பின்னொரு நாள் பொன்னுருகியோடும் வயல் வெளியின் நடுவிலிருந்த ஒற்றைபாதைவழி நடந்தேன். பாதையின் இறுதியில் பொன்னிறமாக என் தேவன் சிவுலையில் நின்றிருந்தான். பொன் புன்னைகையுடன். என் அவையங்கள் அனைத்தையும் அறுத்தேன். மஞ்சள் குருதி வழிந்து என் கால்கள் பிசுபிசுத்தன.
மாயப்பொன் கதை படித்ததும் தோன்றியது என் அன்புக்குரிய வான்கோ. ஊறிவரும் சாராயத்தில் அதன் தேவ பதம் வராமல் துடிக்கும் நேசையன் தேடி ஓடி மறுமுறை அந்த கடைந்தெடுத்த அமிர்தம் கிடைக்கையில் அவன் காதுகளில் மூச்சதிர நிற்கிறான் கொடும்புலி. வெறுமையுடன் அவன் இருந்து விடுவானோ என்று நான் ஏங்கும் சமயத்தில் கொடும்புலி அவை ரசித்து உதிரம் குடுத்தது. ஆ சந்தோஷம் சந்தோஷம்.
அதி அற்புத கலைஞர்கள் துறவு செல்கின்றனர். அனைத்தையும் துறந்து தன் மூதாதையர் அடைந்த நான் அடையக்கூடிய இயற்கைக்கு நிகரான கடவுளுக்கு நிகரான நிலையை அடைய முயற்சிக்கின்றனர். ஒன்று முடிந்ததும் இதுவல்ல அடுத்தது முடிந்ததும் இதுவும் அல்ல. சுயவதையுடன் அலையும் குண்டுபட்ட போர்வீரனைப்போல நான் எங்கு எதற்கு பின்பு நான் இங்கு அதற்கே அன்று அடங்கா மனத்துடன் அவர்கள் அலைகின்றனர்.
ஒருவேளை கொடும்புலி அவன் அருகில் அமர்ந்து தன்னைப்போலவே நீயும் என்று அங்கீகரித்ததா ? இல்லை கேள்விக்கிடமில்லை அங்கீகரித்திருக்க வேண்டும் அதுவே என்னிலையில் நிம்மதி. துறவு செல்பவர்கள் நீங்கள் அடைவதை அல்ல உங்களால் அடைவவே முடியாததை அடைகின்றனர்.
No comments:
Post a Comment