பரமசிவன் தன் தொடையில்விழுந்த
பனிப்பொருக்கை தட்டிவிட்டு "என்னடே இப்புடி குளுருக...செய்" என்று சலித்துக்கொண்டே கொட்டாவி
விட்டவாறு மீண்டும் தூங்கிப்போனார். கைலாயம் ஆட்கள் வரத்தின்றி வெறிச்சோடிக்கிடந்தது. அங்குமிங்குமாய்
சில பூத கணங்கள் தூங்கிக்கொண்டிருந்தன. தோரணவாயிலில் அருகில் குந்தி அமர்ந்திருந்த
பூதகணம் அண்ணாந்து பார்த்து அதன் உச்ச்சியில் ஆடிக்கொண்டிருந்த ஒற்றை தீபத்தில் விரல்
நீட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
"வெயிலு குண்டில அடிச்சாலும்
எழுந்திரிக்க மாட்டான் இந்த ஆளு" என்றவாறு பார்வதி கூந்தலை எட்டுமுறை சுற்றி
கொண்டையாக்கிக்கொண்டாள். குளிர்காலாமானதால் பரமசிவன் பரமானந்தத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
பார்வதி முதுகில் தட்டி
எழுப்ப முயன்ற போது அவர் பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தார்.
“நா ஒண்ணும் செய்யல்ல...நா ஒண்ணும் செய்யல்ல...”
“என்னாச்சு!!” என்றாள் பார்வதி பதறியவாறே.
“எவனோ பொடதிலயே போட்டு
சவுட்டு சவுட்டுனு சவுட்டுகான். நானும் கைய தூக்கி பாக்கேன் கால்ல விழுந்து பாக்கேன்
ஒண்ணுத்துக்கும் வழியில்ல. அந்தால முளிச்சேன்”
“நான் தான் பைய தட்டி எழுப்புனேன்”
என்று முகத்தை மூடிக்கொண்டு பார்வதி சிரித்தாள்
“சென்னிய திரிப்பிருவேன்
பாத்துக்க. எழுப்பிவிட்டதுமில்லாமா சிரிக்கவேற செய்யியா. அந்தால போட்டி” என்று சீறினார்.
கழுத்தில் இருந்த பாம்பு
“இவன் யாருடே என்னவிட பயங்கரமா சீறுகான். நீ கொஞ்சம் அடங்கு கேட்டியா”
“நீ சலம்பாதடே , பொத்திக்கிட்டு இரியும்” என்றார் சிவன்
“வெயிலடிக்கி...எறங்கி அந்தால
போய் படியளந்துட்டு வரணும்லா. அதுக்குதான நான் எழுப்புனேன்” என்று மூக்கை சிந்தியவாறு
கேட்டாள் பார்வதி. அதற்குள் அவள் அணிந்திருந்த கச்சை ஈரத்தில் நனைந்திருந்தது
“செரிட்டி கண்ண கசக்கிட்டு
நிக்காத , அந்த சொப்பனம் பயமுறுத்திப்போட்டு , அதா கொஞ்சம் கடு கடுனு இருந்துட்டேன்.
விடு விடு , விடிஞ்ச நேரத்துல அழுதுகிட்டு”
“நானே இந்த சீசன்லதா நல்லா
ஒறங்குவேண்ணு உனக்குதா தெரியும்ல. மத்த எல்லா டைம்லயும் வந்து கூட்டம் கூட்டமா
நிண்னு, ஹர ஹர மகாதேவா சம்போ மஹாதேவாண்ணு கிடந்து ஊரக்கூட்டுவானுக. இவனுங்களுக்கு சோத்த
போட்டுட்டு வந்து அப்பொதா படுத்துருப்பேன். உடனே சம்போ சம்போண்ணு சவதேளவு. இந்த
சீசன்ல வரச்சொல்லுபாப்போம் குண்டி கிளிஞ்சிரும்லா.”
அப்போதுதான் பெற்றொரின்
படுக்கை அறைக்குள் நுழைந்த கணேசன் அம்மா அழுவதைப்பார்த்து “அப்பா எதும் சொன்னாரா ,
நா கேக்காவா?” என்றான் கோவமாக
“உனக்கு இந்த தலையே போதும்
மக்கா அடுத்தால எந்த தலைய கொண்டுவருவானுகளோ யாருகண்டா” கணேசனின் தலையை வருடிக்கொண்டே
கூறினாள் பார்வதி.
“இல்லம்மா இந்தாளு செரிகிடையாது
சும்மா அரிப்பெடுத்து திரியாரு , இந்தா அந்த மலைக்கு கீழ கங்கா ஒரு பொம்பளைக்கூட நா
இந்தாள பாத்தேன். என்ன பாத்துட்டு தெரிச்சுல்லா ஓடுகாரு” என்று சிவனைப்பார்த்து முறைத்தான்
கணேசன்.
“அது செரி இப்பொல்லா தெரியி
அந்த அடி யாரு அடிச்சுருப்பாண்ணு. படியளக்கப்போரெண்ட்டு இப்டி வீடுவீடா மணியாட்டிட்டு
இருக்கியாவே”
“எட்டி சத்தம் போடாத அந்தால
வச்சி இழுத்துருவேன் , அது எனக்கு தங்கச்சியாக்கும்”
“இழுப்பவே...இழுப்ப , நா
என்ன அழுக்கு நோண்டிட்டு இருப்பனா. தூக்கி மலத்திர மாட்டேன் , நீ எப்போ யார தங்கச்சியாக்குவ
, யார மச்சினிச்சியாக்குவண்ணு எனக்கு தெரியாதா”
வாசலில் கதவிடுக்கு வழி
வெளிச்சம் மூடி மறைவது தெரிந்து
கதவை தன் பின்னகையால் சாத்தி அதன் மீது சாய்ந்து “ஊர கூட்டாதட்டி , எனக்கு
கொறச்சாலாருக்கு”
“அது நீ அவவீட்டுல போய்
கெடக்கமுன்னுகூட்டி யோசிச்சிருக்கணும்லா”
“புருசங்காரனுட்ட பேசுகமாரிய
பேசுக”
“நீ ஏங்கூட ஒரு ராத்திரி
படுத்துட்டு அங்க ஒரு ராத்திரி போய் படுப்ப அறுதப்பயல உனக்கு என்னல மரியாத”
“ஏட்டி உனக்கு இவ்ளொதா
லிமிட்டு”
“தோப்பனாரே அங்கயே நில்லும்
இல்லனா கத வேறமாரி ஆகிப்போடும் ஆமா” என்றவாறு கணேசன் பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து
வைத்தான்.
கைலாயம் நடுங்கியது , பூதகணங்கள்
பயத்தில் பாறைகளுக்கிடையில் இடுங்கிக்கொண்டன.
ஒரு பூதகணம் “அண்ணாச்சிக்கு
இது வேண்டியது தா , நல்ல தங்கமான பெண்ணுல்லாடே பார்வதி , அவள விட்டுப்போட்டு இப்டி
கண்ட பெண்ணுக்கூட போன சும்மா விடுவாளோ அவ”
“இருந்தாலும் அம்மை மரியாத
இல்லாம பேசப்பிடாதுலாடே. உலகத்துக்கே படியளக்கப்பட்டவருல்லா” என்றது இன்னொன்று.
“ஆமா நொட்டுனாரு , உனக்கு
ஒரு பொம்பளப்பிள்ள இருந்தா தெரியும் இந்த அழுக”
“அது செரி , அந்த பய மாடன்
வந்தா இப்போ கத வேற கேட்டியா , அம்மை அழுகத கேட்டா பரமசிவன தூக்கி அடுப்பு விறகுல காட்டி
சுட்டு திண்ணுப்போடுவான்”
“அந்த பய மட்டும் என்ன
எளக்காரமா மாவுசக்கிய கெடுத்தவந்தான”
“என்னல அண்ணாச்சிக்கும்
மரியாதயில்ல , பிள்ளேளுக்கும் மரியாதயில்ல”
“லேய் மக்கா நா ஞாயத்துக்கபக்கமாக்கும்
அதா அம்மைக்கு பக்கம். உமக்க அண்ணாச்சிய தூக்கி அந்தால மலைக்கு பின்னால எறிஞ்சிட்டு
விரிச்சுப்போட்டு எறங்கி போய்ருவா. அதுக்குபொறவு இந்த மல குளுராது கெடந்து எரியும்
நாள்பூரா பாத்துக்க”
“லேய் நீ பேசுகது அவனுக்கு
கேக்குமாக்கும் பொணந்திண்ணிப்பய”
“அப்போ இதும் கேட்ருக்கும்லா
உன்னத்தா மொதல்ல வந்ததும் திம்பான்”
இருவரும் சிரித்தனர்
“அண்ணாச்சிய ஆளு என்னாண்ணு
நெனச்ச நீயி. அதெல்லா பேசியே மயக்கிப்புடுவாருல்லா, நீ பாத்துட்டேயிரி ராத்திரியாதக்குள்ள
எப்டி ரெண்டும் பெணங்கிப்போகும்ண்ணு”
“அதும் செரிதா அவரு பேச்சக்கேட்டுத்தான
இங்க நம்ம இப்பொவர அடிம வேல பாத்துட்டு கெடக்கோம்”
“நீ பொத்திட்டு இருக்கியா
உள்ள கஞ்சிக்கும் வழியில்லாம அக்கிப்போடாத”
நடுயிரவில் நின்ற பனி மீண்டும்
பொழிய ஆரம்பித்தது கூடவே பலத்த காற்றும். மலைமேலிருக்கும் காற்று நிற்பவரை தூக்கி எறிந்து “அந்தால
போல குறுக்க நிக்காம” என்று கூறுவது போன்றது.
அவர்களில் படுக்கை அறைக்குள்
நிசப்தம் நிலவியது. கணேசன் கம்பளி போர்த்திய பனி நாற்காலியில் அமர்ந்திருந்தான். பார்வதி
கணேசனின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். பதில் கிடைத்துவிடும் என்ற ஏக்கத்துடன்
தரையில் அமர்ந்திருந்தாள்.
“வே , உனக்கோரு ஞாயம் ஊருக்கொரு
ஞாயம்ண்ணு இருக்கமுடியாது. எங்கம்மைய விட்டுப்போடும். எனக்கு எப்டி பாத்துகிடணும்ணு
தெரியும்”
“லே மக்கா நா மனசறிஞ்சி
சொல்லுகம்ல , உங்கம்மைய நா அடிச்சிருக்கேன், பொடதிலயே அடிச்சி அப்பனுக்க வீட்டுக்கு
போவசொல்லிருக்கேன். ஆனா நா வேற ஒரு பொம்பளையையும் கைகொண்டு தொட்டது கூட கெடையாது” என்று
நிறுத்தினார் பின் தொடர்ந்து “அது சாமிக்கு தெரியும்” என்று அமைதியாக முடித்தார்
“வே நீரே சாமிதான , மறந்து
போச்சோ!” என்று எக்காளமிட்டது பாம்பு. கணேசன் அதனை நோக்கி கண்ணடித்தான் அது பதிலுக்கு
நாக்கை நீச்சி ஸ்துதி செய்தது. கணேசனும் பாம்பும் அவர்கள் இருவர் மட்டும் அறிந்த உண்மையை
கள்ளச்சிரிப்புட்ன பகிர்ந்துகொண்டனர்.
“சீ மூடுல நாறப்பயலோழி”
என்றார் கழுத்திலிருந்து எடுக்க முடியா பாம்பைப்பார்த்து
“என்ன விட்று நா எம்புள்ளக்கூட
எங்கப்பா வீட்டுக்கே போறேன்” என்று எழுந்தாள்.
“இங்கயே இருட்டீ , பேசி
செரிபண்ணிக்கலாம்”
“அதுக்கெல்லா நேரம் இல்லவே
, ஒண்ணு நாங்க போறோம் இல்ல நீரு இங்கருந்து போவும். கையாலத்த ஆண்டது போதும் நாங்க பாத்துக்கிடுதோம்”
என்றான் கணேசன்
“நா அங்க பேசிட்ருக்கேன்”
என்றவர் பார்வதையை நோக்கி “இந்த சின்ன நாயிக்கி முன்னால என்ன அசிங்கபடுத்தாதட்டீ. சொன்னா
கெளுட்டீ நம்ம பேசுனாலே செரி ஆயிரும். ஆனா சத்தியமா சொல்லுதேன் நா அனாதையா இருந்து
வளந்த பயலாக்கும் எனக்கு அம்மையும் அப்பனும் நீயாக்கும் இந்த பயல்லா எப்போட்டீ வந்த
நமக்கு இடைல”
“நீங்க அங்க போயிருக்காக்கூடாதுல்லா”
“ஒரு காரணத்துக்காகத்தா
அவள பூலோகத்துக்கே வரவச்சி அந்தால தலைல வாங்கி அமத்தி வச்சிருக்கேன். எல்லாம்
ஒழுங்கா இருக்காண்ணு வீட்டுல ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்தேன் அவ்ளோதா நடந்தது ,
மத்தது எல்லா இந்தா நிக்காம்ல உனக்க மவென் கட்டிவிட்டது”
“வே யாருவே கட்டிவிடுகா
, நான்தான் நீங்க ரெண்டு பேரும் சேந்து உருண்டத பாத்தோம்லா. இங்க வந்து கள்ளத்தனம்
காமிக்கீரா. மானம் மரியாதைக்கு பேசும்வே” என்றான் கணேசன்
“லேய் உன்ன கொழுத்திறுவம்ல”
என்று நெற்றிக்கண் திறந்தார்.
கணேசன் எதிர்பார்த்த கணம்
அது , தாவிக்குதித்து அவர் கழுத்தில் ஏறி அமர்ந்தான். பரமசிவன் அதனை எதிர்பார்க்கைல்லை.
தன் தும்பிக்கையால் நெற்றிக்கண்ணை மூடி. பாம்பைக்கொண்டு கழுத்தை நெரித்தான் அவரின்
கைகால்களை தன் துதிக்கையால் சுற்றிவளைத்துபிணைத்துக்கொண்டான் சில நிமிடங்கள் திணறிய
சிவன் வாய் பிளந்த மேனியாக இறந்து கிடந்தார். பாம்பு நெளிந்து கணேசனின் கால்களுக்கடியில்
நின்றது.
“பரிதாமகரமான இறப்பு” என்றது
ஒரு பூதகணம்
“அம்மா நீ வெப்ராளப்படாத
, அந்தாளுக்கு உனக்கூட வாழ தகுதியில்ல” என்றான் கணெசன்
“அதுக்குண்ணு கொண்ணு போட்டியே
பாவீ…” என்று இறந்த உடம்பை கட்டி அழுதாள்
“இவனெல்லா இருந்து என்னதத
சாதிக்கபோறா. உன்ன நா பாத்துக்கிடுதேம்மா.”
“அம்மா நா உன்ன கல்யாணம்
பண்ணிக்கிடுதேன் , என்ன மாரியே யானத்தலைல ஒரு பிள்ள எப்டிமா”
பார்வதி வெறித்து அவனையே
பார்த்துக்கொண்டிருந்தாள்
“அம்மா உலகத்த சுத்தி வந்துட்டனே”
என்றவாறு குட்டி முருகன் கைலாயக்கதவுகளை தட்டினான்
கணேசன் குனிந்து பாம்மைப்பார்த்தான்.
அது அவனைப்பார்த்து கண்ணடித்தது.
No comments:
Post a Comment