அவன் அங்கே தனியாக நிற்க வேண்டிய கட்டாயம்
நின்றான் கையில் தொரட்டிக்கம்புடன்
அதன் எடை தாங்காமல் விழுந்துவிடுபவனைப்போல
சுற்றி நின்ற ஆடுகள் அவனை கண்டுகொள்ளாமல் மேய்ந்தலைந்தன
கேட்காத ஆடுகளை மிரட்டி கம்பை சுழற்றினான்
கால்களுக்கு கீழே கருத்த மண்ணில் வெக்கை நீரென வழிந்தது
கரிசலின் சூடு தாங்காமல் "யம்மோ யம்மோ" என்று கஷ்டக் குதியாளமிட்டான்
தூரத்து மொட்டை குன்றின் மீதிருந்து வந்தது குரல்
"உனக்கு எதுக்கு தொரட்டிக்கம்பு"
அழ நினைத்த அவன் முகம் அப்படியே தங்கி நின்றது
No comments:
Post a Comment