Wednesday 25 March 2020

வேட்டு -சிறுகதை வாசிபனுபவம்

https://www.jeyamohan.in/130303#.Xnvc-YhKhPY

வோல்கா முதல் கங்கை வரை வரலாற்று புனையில் முதல் அத்தியாயத்தில் நிஷா என்ற பெண் தலைவியான அம்மா தன் தலைமைப்பொறுப்பை ஆண்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை இழக்கும் தருணத்தில் அடுத்து அதற்கு தயாரக தன் மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொல்ல நினைக்கிறாள். ஆனால் அந்த முயற்சியில் அவளும் இறக்கிறாள். மூன்றாவதாக அதற்காகவே காத்திருந்தது போல நிஷாவின் இன்னொரு மகள் தலைவியாகிறாள். தேவையும் அதிகாரமும் அறங்களை உருவாக்கியிருந்த காலமது. ஏனோ அந்த கதை வேட்டு கதையுடன் இணைந்து கொண்டது.

வாழ்தலின் பொருட்டே இவ்வுலக உயிர்கள் தன்னளவில் நகர்ந்து கொண்டிருக்கிறன. எனக்காக எங்களுக்காக. தாய் வழிச்சமூகம் தன்னளவில் பெண்களிடத்தில் முழு அதிகாரம் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆண்களின் நிலை என்ன யோசித்துப்பார்க்கையில் ஜானம்மாவும் பார்வதியும் அவர்கள் கைகளில் வேலாயுதமும் பாஸ்கரனும்
குஞ்ஞாமனும் ஔசேப்பச்சனும் ஆடுகின்றனர்.

அங்கு ஆட்டுவிப்பது பெண்களே. அன்பென்ற ஒன்று இல்லாத வாழ்தல் ஒன்றையே இலக்காக கொண்டு அவர்கள் ஆண்களின் மேல் வெளித்தெரியாமல் ஆதிக்கத்தை செலுத்துகொன்றனர். பெரேரா என்ன செய்தாலும் அவர்கள் அவனை விட்டுச்செல்லாதர்க்ற்கு காரணம் வாழ்தலே என்று தோன்றுகிறது. 

ஜானம்மாவும் பார்வதியும் ஒத்த உருவத்தை உடைவர்கள். அவர்கள் இருவருமே சேர்ந்து இதனை லாவகாமாக செய்ய முடிந்திருக்கிறது. மிருக கூண்டின் நடுவில் பாஸ்கரன் இருட்டினுள் புணர்வது ஜானம்மாவையும் பார்வதியையுமே.

இன்னொரு பக்கம் பார்த்தால் அவர்களுக்கு வாழக்கை என்பது ஆண்களை வைத்து விளையாடும் சர்க்கஸே. அதில் கிடைக்கும் ஒரு சவால் அச்சம் கலந்த சாவின் விளிம்புவரைச்செல்வது அவர்களை திரும்ப திரும்ப அதனை செய்ய வைக்கிறது போலும்.

பாஸ்கரனுக்கு கைகொடுக்காமல் விட்டுவிடுவது , வேலாயுதத்தை கைவிட வழி வகுப்பது எல்லாம் அந்த ஆண்களிடன் அவர்களுக்குண்டான சலிப்பின் உச்சமோ ?

என்னதான் இருந்தாலும் இரு பெண்களும் தங்களுக்குள் சண்டையிட்டு குத்தி சாவதில்லை.
கடைசியில் ஆண்களே துப்பாக்கியும் அவர்களின் தலை துளைக்கும் வேட்டும்.

No comments:

Post a Comment