மேரி யோசப்பின் விந்துவை வாங்கி ஏந்திக்கொண்டாள். விழித்தலும் அமிழ்தலும் கலந்த ஒற்றைப்பொழுதாய் அது கழிந்து முடிந்தது. அந்த நொடி கோடான கோடி அணுக்களில் ஒன்று கதவை தட்டி உள்நுளைந்து தன் வருகையை பதிவு செய்தது. உலகமறியா அவளின் மனம் ஒன்றை மட்டும் அந்த கணத்தில் அறிந்திருந்தது. தன்னை தன் உடலை அதன் பூதாகாரமான ராட்சச உருவத்தை உணர்ந்து துடித்தது அதிர்ந்தது. கிடக்க முடியாமல் முன்னும் பின்னும் அலைந்த உடல் சமநிலைக்கு வரும்பொழுது அவளுக்குள் உண்டான மாற்றத்தை அறிந்தவளாய் யோனியை தடவிப்பார்த்தாள். பின் வயிற்றில் கைவைத்து அதன் துடிப்பை உணரமுடியுமா என்று ஆராய்ந்தாள். ஆம் அது துடித்தது அவளுக்கு மட்டும் கேட்கும் அந்த உயிர் தன் மொழியில் துடித்தது "மேரி....துயரமெனும் நான் வந்து தங்கிவிட்டேன். உன்னுள்ளே நான் அனுபவிப்பது மட்டுமே இன்பம்". அவள் புரண்டு படுத்து யோசப்பை மூண்டும் உசுப்பிவிட்டாள். அவளின் அந்த துடிப்பை , சொல்லில் கட்டி எழுப்ப முடியாத ஒன்றை , யோசப்பால் ஒரு பொழுதும் அறியமுடியாத இன்பத்தை அவள் அந்த கருவுடம் பகிர்ந்துகொண்டாள். கைகால் கண் மூக்கு முளைக்காத அந்த கரு அவளை வாஞ்சையுடன் பார்த்தது.
அடுத்த சில தினங்களில் யோசப்பு அகாலமாக இறக்க நேர்ந்தது. அவளும் அந்த உள்ளிருக்கும் கருவும் அழுது தீர்த்தார்கள். பாலை வெளியில் வியர்வை படித்த உடம்பில் மெல்லிய கருப்பு துணி ஒன்றை மட்டும் அணிந்துகொண்டு அவள் பல நாட்களாக அந்த மண்ணால் சுவர் பூசி ஈச்ச மர இலைகளால் கூரை கட்டப்பட்ட ஒற்றை அறை வீட்டில் ஒருக்களித்து கிடந்தாள். இளசுகளும் பெருசுகளும் வந்து போவதும் துக்கம் விசாரிப்பதும் வாடிக்கையாக இருந்தது. அது நின்று போனதும் அவள் கடவுளிடம் வேண்டினாள் "இந்த உடலை என்ன செய்வது". கடவுளிடமிருந்து பதில் வராததும் கரு பதிலளித்தது "நாம் அதனை கவனிப்போம் , அதற்கு உணவிடுவோம் , மகிழ்விப்போம். அதுவே எனக்கும்!". அவள் அதனை ஆமோதிப்பது போல தலையசைத்தாள்.
தினமும் அதனுடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள். "உன் முலைகள் வர வர மிருதுவாகி , இளகிக்கொடுக்கிறதா"
அவள் அதற்கு "ஆம் பிள்ளையே , காம்புகளும் கருத்து பெரிதாகி வருகின்றன. அதனை தொடாமல் என் ஒரு நாளும் களிவதாக இல்லை"
"உன் யோனியை நான் சில சமயம் தொட்டுப்பார்ப்பதுண்டு"
"உன் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது. அது உனக்கே"
"உந்தன் வளிப்பான தோள்களில் நான் கன்னம் வைத்துக்கொள்வேன்"
"அவை உனக்காகவே படைக்கப்பட்டவை"
அவள் யோசப்பை மனதில் நினைத்துக்கொண்டு கால்களுக்கிடையில் கைகொண்டாள். அவன் உடலில் புதிதாக முளைத்த தலை. கண்களை மூடிக்கொண்டே கருவிடம் பேச்சுப்போட்டாள் "உன் உருவம் எனக்கு காணக்கிடைத்தது"
"நானே உனக்கு அனுப்பி வைத்தேன். யோசப்பின் வழி உன்னில் வந்தவன் தலை மட்டுமே மாற்றம். என்னால் உன்னை நேருக்கு நேர் காண முடிகிறது"
"உன் பழுப்பு நிற கண்கள் , நீண்ட நாசி , நீண்ட முகம். நீ யாரைப்போலவும் இல்லையே!" அவளின் இன்னொரு கை காற்றில் அவன் உருவத்தை ஸ்பரிசித்தது.
"நான் யாரைப்போலவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே அம்மா.....நான் நானாக உருவெடுத்துள்ளேன்"
"உன் மூச்சுக்காற்று என்னில் கலந்து தனல் எழட்டும். என் காமத்திற்கு நீயே சாட்சி"
"இங்கு உன் என் இல்லை அம்மா....நம் காமம். நாம் திளைப்போம்"
ஒரு கை கால்களுக்கிடையில் இருக்க மறு கையை மடித்து தலைக்கு கீழே வைத்து பல்லியைப்போல இடுப்பை நெளித்தாள். வியர்த்தாள். மூடிய கண்களில் கருவின் வளர்ந்த உருவம். இறுதியாக அவள் தலையைச்சுற்றி சிவந்த ஒளிவட்டமொன்று தோன்றியது.
வயிறு பெருகி வர ஆரம்பித்தது. யோசப்பு விட்டுச்சென்ற கழுதைகளை வாடகைக்கு விட்டு கிடைப்பதில் அவளும் கருவும் நின்று வளர்ந்தனர். ஓர் நாள் கானால் நீர் நிறைந்த அந்நிலத்தில் பேயுருகொண்டு மின்னல் உதித்து மறைய மழை நிலத்தை அறைந்தது. மேரியின் வீட்டில் தஞ்சம் புகுந்தான் ஓர் வாலிப நாடோடி. உடல் முழுதும் புழுதி படிய மழையில் நனைந்து வீட்டுக்கூரையில் ஒதுங்கியவனை அவள் அழைத்து அவனுடம் தங்கவைத்தாள். மேலங்கி நனைந்து அவன் சூம்பிய மார்பின் காம்புகள் வழி நீர் வழிந்தது. அவலட்சணமான முகத்தில் சுருங்கிய கண்களின் கீழே கருத்த தழும்பு. கர்ப்பவதியான விதவை தனியாக இருப்பதை அறிந்ததும் வெளியேறி தன் மேன்மையை காட்டினான். அவள் மீண்டும் அழைக்க தாமத்தித்த போது கரு அவளை உந்தி வெளித்தள்ளியது. மீண்டும் உள்ளே வந்தவன் அங்கியை பிளிந்து அணிந்து கொண்டான்.
ஊர் பயல்கள் வரவில்லை , தானும் அவர்களிடன் செல்லவதாயில்லை. இவன் தேவைப்பட்டான். இருவரும் கலந்தாலோசித்து அவலட்சண நாடோடியின் நெஞ்சில் சாய்ந்தனர். கரு தைரியம் சொன்னது "கிடைக்காதது கிடைத்துள்ளது". யோசப்பை விட அவன் நன்றாகவே புணர்ந்தான். மதநீர் பொங்க உடலே வெடித்துவிடும் நிலையில் அவள் கருவின் மீது கைவைத்து "அவலட்சண பிறவிகள் அதன் காரணமாகவே இணையை சந்தோசப்படுத்த வெட்டுக்கிளிகளைப்போல இறக்கவும் தயாராயிருக்கின்றன". அவன் முன்னும் பின்னும் அசையும் போது அந்த குலுக்கத்தில் கரு கிரங்கிக்கிடந்தது. முனங்கல் ஒலியாக அது பிதற்றியது "அம்மா....எனக்கு எப்பொழுது பால் கொடுப்பாய். என் உடலை நீ ஸ்பரிசிக்க வேண்டும்"
மழை நின்றதும் நாடோடி கிளம்ப தயாரானான். அவள் கிடைத்த பண்டங்களில் விருந்து படைத்து அவன் வயிறு நிரம்புவதை தன் வயிற்றில் கைவைத்துக்கொண்டே இன்பத்தோடு கண்டாள். அவன் சென்றபிறகு. "இனிய பகற்கனவொன்று நிறைவேறியது"
"எனக்கு நன்றி சொல்வாய்"
தலையின் பின் அந்த ஒளிவட்டம் இன்னும் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்
முழுவதுமாய் வளர்ந்திருந்த கரு அவளிடம் கதைக்காத கதைகளில்லை. உடல் முழுதாய் வளருமுன் அது அவர்களிருவர் உடலை மட்டும் முழுதாய் அறிந்திருந்தது. ஒருமுறை மேரியின் அக்குள் வியர்வையின் மணத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் திக்கி நின்றதை அவள் அறிந்து நகைத்தாள். வயிறு கீழிறங்கி யோனிவழி நீர் வழிந்தது. சுவரில் சாய்ந்தவள் கால்களை எதிரெதிர் திசையில் விலக்கவும் கண்கள் மூடியபடி முதலில் தலை வந்தது. வழிந்து நிலத்தில் விழுந்த பிண்டமெனும் கரு தன் உடலை தனியாக உணர ஆரம்பித்ததும் அழ ஆரம்பித்தது. ஆனால் உடலின் இண்டு இடுக்குளும் அதன் இன்ப மயமாக துடுப்புகளும் மண்டையின் ஓரம் எங்கோ பதுங்கி இருந்ததால் அழுகையை நிப்பாட்டி மேரியின் முலையை இமைக்காமல் பார்த்தது. அவள் கருவை தூக்கி முலையில் வைக்கவும் தன்னுடலின் சக்தியறிந்து உறிஞ்சி இழுத்தது.
மேரியின் தலையின் பின்னிருந்த ஒளிவட்டம் மறைந்து கருவின் தலைக்குபின் குடிகொண்டது. கரு தன்னை ஏசு என்றழைத்துக்கொண்டது. சூட்சமமாய் உடலறிந்தவன் இனி நேருக்கு நேர் அதனை அணுகப்போகிறான். மேரியின் துணையின்றி. அவன் வெளிறிய உடல் குறுகிய வளராத ஆண்குறியைப்போலிருந்தது.
No comments:
Post a Comment