வானம் மண்ணின் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்தது.
நான் அனுபவித்து நடந்து சென்றிருந்தேன். துணைக்கு என்னுடன் கோடி மனங்களுடன்.
கூட்டத்திலிருந்து தனித்த நகக்கண் அளவுள்ள பறவை ஏவுகணைகள் இடைவெளி வழி
அதிர்ஷ்டம் விளக்கு காட்டிட பறந்து சென்றிருந்தது.
பிறகொரு நாள் வீட்டினில் தனிமையில் அமர்ந்து பாத்திரம் கழுவுகையில் பிரார்த்திக்கிறேன்
"அவன் பத்திரமாக பறந்து சென்றிருக்க வேண்டும்"

வேட்டையில் இறங்கிவிட்டேன் எங்கும் பேரமைதி நான் அலைகிறேன் தனித்த ஓநாயை போல.
ReplyDeleteகடல் அலையில் சிக்கிக்கொண்ட மணல் துகள்கள் போல முன்னும் இல்லை பின்னும் இல்லை
அமைதியாக மெத்தையில் கிடக்கிறாளா என்னைத்தேடி அவளும் அலைகிறாளா இல்லையா.
அலையாவிடடால் என்ன செய்ய. கொஞ்சம் உள்சிரிப்பு நான் அலைகிறேன் அது போதும்.
இல்லை போதாது. எழுந்திடு என் நகக்கண் கூட பற்றி எரியும் கண்கள் வேண்டும். உப்பிய மது குவளைகள் வேண்டும். பின்னங்கழுத்தை சுற்றிவளைக்க கருங்கூந்தல் வேண்டும் பின்னிப்புடைத்து தூக்க கால்கள் வேண்டும். எழுந்திடு எழுந்திடு போதும் எழுந்திடு